< Back
கிரிக்கெட்
ஐசிசி ஒருநாள் அணி 2023; ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்

image courtesy; AFP

கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் அணி 2023; ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்

தினத்தந்தி
|
23 Jan 2024 2:05 PM IST

2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

துபாய்,

2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்ப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியிலிருந்து 6 வீரர்களும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா 2 வீரர்களும் நியூசிலாந்திலிருந்து 1 வீரரும் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம் பின்வருமாறு;-

1. ரோகித் சர்மா (கேப்டன்) - இந்தியா

2. சுப்மன் கில் - இந்தியா

3. டிராவிஸ் ஹெட்- ஆஸ்திரேலியா

4. விராட் கோலி - இந்தியா

5.டேரில் மிட்செல் -நியூசிலாந்து

6.ஹென்ரிச் கிளாசென் - தென் ஆப்பிரிக்கா

7. மார்கோ ஜான்சன் - தென் ஆப்பிரிக்கா

8.ஆடம் ஜம்பா - ஆஸ்திரேலியா

9. முகமது சிராஜ்- இந்தியா

10.குல்தீப் யாதவ்-இந்தியா

11.முகமது ஷமி- இந்தியா

பெண்கள் அணியை பொறுத்தவரை இந்திய வீராங்கனைகள் யாரும் இடம்பெறவில்லை. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

அணி விவரம்;-

1.போப் லிட்ச்பீல்ட் - ஆஸ்திரேலியா

2.சமாரி அதபத்து (கேப்டன்)-இலங்கை

3.எல்லிஸ் பெர்ரி-ஆஸ்திரேலியா

4.அமெலியா கெர்-நியூசிலாந்து

5.பெத் முனி-ஆஸ்திரேலியா

6.நேட் ஸ்கிவர் பிரண்ட்-இங்கிலாந்து

7.ஆஷ் கார்டனர் - ஆஸ்திரேலியா

8.அனபெல் சுதர்லண்ட்-ஆஸ்திரேலியா

9;நடினி டி கிளெர்க்-தென் ஆப்பிரிக்கா

10;லியா தகுகு - நியூசிலாந்து

11. நடியா அக்தர் - வங்காளதேசம்

மேலும் செய்திகள்