< Back
கிரிக்கெட்
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை : விராட் கோலி, சிராஜ்   முன்னேற்றம்...!
கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை : விராட் கோலி, சிராஜ் முன்னேற்றம்...!

தினத்தந்தி
|
19 Jan 2023 4:11 PM IST

ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது

, துபாய்,

ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறினார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது , இடத்துக்கு முன்னேறினார்..

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ரஸ்ஸி வான் டெர் டசன் (தென் ஆப்பிரிக்கா ) 3வது இடத்தில் டி காக் (தென் ஆப்பிரிக்கா ) உள்ளனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் பவுல்ட் முதல் இடத்திலும், ஹேஸ்லேவுட் (ஆஸ்திரேலியா) 2வது இடத்திலும், இந்திய வீரர் சிராஜ் 3வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) முதல் இடத்திலும் , முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 2 வது இடத்திலும் , மெஹதி ஹசன் (வங்காளதேசம்) , 3வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்