ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர் விராட் கோலி முன்னேற்றம்..!!
|ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் போன்றவை முதல் 4 இடங்களில் உள்ளன.
உலகக்கோப்பையில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரர் கே.எல். ராகுல் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் முகமது சிராஜ் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார்.