< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான பெயர்களை பரிந்துரைத்த ஐசிசி..!!
|9 Sept 2022 8:34 PM IST
சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கபட்டுள்ளார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி பரிந்துரைத்து உள்ளது.
சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இவர்களில் ஒருவர் விரைவில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.