< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதால் ஐ.சி.சி.க்கு இத்தனை கோடி இழப்பா? வெளியான தகவல்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதால் ஐ.சி.சி.க்கு இத்தனை கோடி இழப்பா? வெளியான தகவல்

தினத்தந்தி
|
19 July 2024 12:57 PM GMT

ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது.

துபாய்,

ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் லீக் ஆட்டங்கள் உட்பட சில போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டன. ஆனால் அங்கு கிரிக்கெட் பிரபலம் இல்லாததன் காரணமாக பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அதனால் போட்டி நடைபெறும் மைதானங்களில் பெருமளவு இருக்கைகள் காலியாக இருந்தன.

இந்நிலையில் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தியதால் ஐ.சி.சி.-க்கு சுமார் ரூ. 167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்