< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி.  ஜூன் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய நட்சத்திரங்கள்
கிரிக்கெட்

ஐ.சி.சி. ஜூன் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய நட்சத்திரங்கள்

தினத்தந்தி
|
5 July 2024 12:06 PM IST

ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய இந்திய நட்சத்திரங்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குனரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்