2023-ம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் அணியை அறிவித்த ஐசிசி...4 இந்திய வீரர்களுக்கு இடம்
|ஐசிசி அறிவித்த 2023-ம் ஆண்டிற்கான ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்,
2023-ம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனகளை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது.
இதில் ஆண்கள் அணியில் சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், நிக்கோலஸ் பூரன் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் அணியில் ஒரே ஒரு இந்திய வீராங்கனையாக தீப்தி ஷர்மா மட்டும் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்கு கேப்டனாக இலங்கையின் சாமரி அத்தபத்துவும், விக்கெட் கீப்பராக பெத் மூனியும் இடம் பிடித்துள்ளனர்.
ஆண்கள் அணி விவரம்; யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பில் சால்ட் (இங்கிலாந்து), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர், வெஸ்ட் இண்டீஸ்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன், இந்தியா), மார்க் சாம்ப்மென் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜனி (உகாண்டா), மார்க் அடெய்ர் (அயர்லாந்து), ரவி பிஷ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ங்க்வாரா (ஜிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).
பெண்கள் அணி விவரம்; சமாரி அத்தபத்து (கேப்டன், இலங்கை), பெத் மூனி (விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர்-பிரண்ட் (இங்கிலாந்து), அமெலியா கெர் (நியூசிலாந்து), எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மேகன் ஷட் (ஆஸ்திரேலியா).