உலகக்கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டிக்கான நடுவர்களை அறிவித்த ஐசிசி..!
|இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.