ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்த இந்திய முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்...!
|இந்த கவுரவத்தை இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.
அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், இந்தியாவின் முன்னணி வீராங்கனை டயானா எடுல்ஜி மற்றும் இலங்கையின் சூப்பர் ஸ்டார் அரவிந்த டி சில்வா ஆகியோர் புதிதாக இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.