< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐசிசி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு...!
|8 Jan 2024 5:21 PM IST
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
அதில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், நியூசிலாந்து ஆல் ரவுண்டரான கிளென் பிலிப்ஸ் மற்றும் வங்காளதேச வீரர் தைஜுல் இஸ்லாம் ஆகியோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
இதேபோல் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா மற்றும் ஜிம்பாப்வே வீராங்கனை பிரிஷியஸ் மராஞ்ச் ஆகியோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.