< Back
கிரிக்கெட்
ராகுலின் யோசனையால் சதம் அடித்த கோலி

image courtesy: BCCI twitter

கிரிக்கெட்

ராகுலின் யோசனையால் சதம் அடித்த கோலி

தினத்தந்தி
|
21 Oct 2023 5:22 AM IST

வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் விஷயத்தில் கோலி குழப்பத்தில் இருந்தார் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

புனே,

வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி சதத்தை நெருங்கிய போது, வெற்றிக்கு தேவையான ரன் குறைவாக இருந்ததால் அவரை தொடர்ந்து பேட்டிங் செய்வதற்கு வழிவிடும் வகையில் எதிர்முனையில் நின்ற லோகேஷ் ராகுல் ஒன்றிரண்டு ரன்களை எடுப்பதை தவிர்த்தார். இறுதியில் கோலி சிக்சருடன் சதத்தை எட்டியதுடன் (103 ரன்), வெற்றிக்கனியையும் பறித்தார்.

இது குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில், 'சதம் அடிக்கும் விஷயத்தில் கோலி குழப்பத்தில் இருந்தார். அதாவது ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுப்பதை தவிர்த்தால், அது மோசமானதாக இருக்கும். அதுவும் இது உலகக் கோப்பை போட்டி. தனிப்பட்ட சாதனைக்காக நான் விளையாடுகிறேன் என்று மக்கள் நினைப்பார்கள் என்று கோலி கூறினார். அதற்கு நான், 'நாம் எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறோம். அதனால் சதத்திற்கு முயற்சிப்பது தவறில்லை' என்று கூறினேன். அவருக்காக கடைசி கட்டத்தில் ஒற்றை ரன்னுக்கு ஓட மறுத்தேன்' என்றார்.

மேலும் செய்திகள்