< Back
கிரிக்கெட்
நீங்க சிறு வயதில் என் பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்கிறேன்...! சூர்யகுமாரை கலாய்த்த டிராவிட் - ஜாலி உரையாடல்
கிரிக்கெட்

நீங்க சிறு வயதில் என் பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்கிறேன்...! சூர்யகுமாரை கலாய்த்த டிராவிட் - ஜாலி உரையாடல்

தினத்தந்தி
|
8 Jan 2023 5:25 PM IST

இந்த ஜாலியான உரையாடலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ராஜ்கோட்,

இந்தியா - இலங்கை இடையேயான கடைசி, 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 51 பந்துகளில் அதிரடி சதம் அடித்து 112 ரன்கள் குவித்தார் .அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஆட்டம் முடிந்த உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமாரை நேர்காணல் செய்தார். அந்த உரையாடலில் சூர்யகுமார் குறித்து பேசிய டிராவிட் ,

என்னுடன் இங்கே ஒருவர் இருக்கிறார்,.அவர் சிறுவயதில் இருந்தபோது நான் பேட்டிங் செய்வதைப் பார்க்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். சூர்யா நீங்கள் பார்த்ததில்லை என்று நம்புகிறேன்.சூர்யகுமார், விதிவிலக்கானவர்.

உங்களுக்குள் இருக்கும் சிறந்த பார்ம், என்னை ஒவ்வொரு முறையும், சிறந்த டி20 இன்னிங்ஸைப் பார்க்கவில்லை என்று நினைக்க வைக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடுத்தடுத்து எங்களுக்கு இன்னும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி காட்டுகிறீர்கள் "என்று டிராவிட் பாராட்டினார்

டிராவிட் கேள்விக்கு பதிலளித்து பேசிய சூர்யகுமார்,

எல்லா கடினமான சூழ்நிலைகளிலும் நான் பேட்டிங் செய்வதை ரசித்தேன். உண்மையில் என்னால் எந்த ஒரு இன்னிங்சையும் அதிலிருந்து பிரித்து எடுக்க முடியாது. எந்த ஒரு இன்னிங்ஸையும் எடுப்பது உண்மையில் எனக்கு கடினம். . எனக்காகவும், அணிக்காகவும் நன்றாக பேட்டிங் செய்தால், அதிக மகிழ்ச்சி அடைகிறேன். என்று தெரிவித்தார்

இந்த ஜாலியான உரையாடலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்