< Back
கிரிக்கெட்
உங்க மனைவியை காதலிக்கிறேன்... மெசேஜ் அனுப்பிய இந்திய ரசிகர்... கம்மின்ஸ் கொடுத்த பதில்

image courtesy;AFP

கிரிக்கெட்

உங்க மனைவியை காதலிக்கிறேன்... மெசேஜ் அனுப்பிய இந்திய ரசிகர்... கம்மின்ஸ் கொடுத்த பதில்

தினத்தந்தி
|
17 Feb 2024 6:07 PM IST

உலகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் நிறைய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ், தன்னுடைய மனைவி பெக்கி கம்மின்சுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் "சூப்பரான அம்மா, மனைவி, என்னுடைய காதலி. மேலும் மிகச்சிறப்பாக அலைச்சறுக்கு செய்பவர். காதலர் தின வாழ்த்துகள் பெக்கி கமின்ஸ்" என்று பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்த ஒரு இந்திய ரசிகர் ஒருவர் "நான் ஒரு இந்தியன். நான் உங்களுடைய மனைவியை காதலிக்கிறேன் " என்று சேட்டையாக மெசெஜ் அனுப்பினார்.

அதற்கு"இதை நான் என்னுடைய மனைவிக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று அந்த ரசிகருக்கு பேட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார்.

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்