< Back
கிரிக்கெட்
வெற்றி இலக்கை எட்ட முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தது ஆனால்..- தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

வெற்றி இலக்கை எட்ட முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தது ஆனால்..- தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

தினத்தந்தி
|
5 Feb 2024 5:32 PM IST

இந்த தொடரில் மீண்டும் ஒரு நல்ல போட்டியை நாங்கள் விளையாடி உள்ளதாக உணர்கிறேன்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

" கடைசி இன்னிங்சில் எங்களால் வெற்றி இலக்கை துரத்த முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், ஸ்கோர் போர்டில் இருந்த அழுத்தம் காரணமாகவே எங்களால் இலக்கை நோக்கி செல்ல முடியவில்லை. இரு அணிகளிடம் இருந்தும் மிகச் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. ஒரு நல்ல போட்டியை நாங்கள் இந்த தொடரில் மீண்டும் விளையாடி உள்ளதாக உணர்கிறேன்.

எங்களது அணியில் உள்ள அனைவருமே சிறந்த வீரர்கள் தான் இருந்தாலும் இந்திய ஆடுகளங்களின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட வேண்டியது அவசியம். எங்களது அணியில் ஆண்டர்சன் அற்புதமான வீரர். அதேபோன்று இந்திய அணியில் பும்ராவும் மிகச் சிறப்பான வீரர்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்