< Back
கிரிக்கெட்
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறும் என அஞ்சுகிறேன் - ஷோயப் அக்தர்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறும் என அஞ்சுகிறேன் - ஷோயப் அக்தர்

தினத்தந்தி
|
4 Oct 2022 2:06 AM IST

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறும் என அஞ்சுகிறேன் என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-4 என இழந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இந்தத் தொடருக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், இந்தத் தொடரின் முடிவு பாகிஸ்தானுக்கு சங்கடம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது பாகிஸ்தான்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறும் என அஞ்சுவதாக ஷோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார். இது டொடர்பாக அவர் கூறுகையில்,

"எனக்கு என்னவோ இந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு நடையை கட்டும் என தோன்றுகிறது. அதை எண்ணி நான் அஞ்சுகிறேன். அணியின் மிடில் ஆர்டர் சிறப்பானதாக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் சேர்க்க தவறினால் மிடில் ஆர்டர் ஒருவிதமான அழுத்தத்திற்கு சென்று விடுகிறது.

கோப்பையை வெல்ல வேண்டும் என எண்ணும் அணி இப்படி செயல்படக் கூடாது. எனக்கு அதில் வருத்தம்தான். அணியில் சிக்கலே அதுதான். தேர்வுக்குழுவினர் அதை அறிந்தும் எந்த மாற்றமும் செய்யாதது அதிர்ச்சிதான்" என அக்தர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் பி-யில் தான் பாகிஸ்தான் அணி

இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்