< Back
கிரிக்கெட்
நான் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பதில்லை, சிறந்த முறையில் ஒவ்வொரு பந்தையும் வீச முயற்சிக்கிறேன் - ஹர்திக் பாண்ட்யா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

நான் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பதில்லை, சிறந்த முறையில் ஒவ்வொரு பந்தையும் வீச முயற்சிக்கிறேன் - ஹர்திக் பாண்ட்யா

தினத்தந்தி
|
24 Jun 2024 1:03 PM GMT

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

செயிண்ட் லூசியா,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செயிண்ட் லூசியாவில் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் களம் இறங்க உள்ளது. இந்நிலையில் நான் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பதில்லை, சிறந்த முறையில் ஒவ்வொரு பந்தையும் வீச முயற்சிக்கிறேன் என இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி உடனான கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பதில்லை. நான் சிறந்த முறையில் ஒவ்வொரு பந்தையும் வீச முயற்சிக்கிறேன். அணிக்கு என்ன தேவையோ அதை செய்ய விரும்புகிறேன். இதை பும்ரா உடன் பேசி இருந்தேன். இந்த விளையாட்டில் சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையிலான பந்தினை வீச வேண்டும். அந்த செயல்பாட்டில் விக்கெட் வீழ்த்துவது சிறந்ததாக அமையும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாக பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். அது எனக்கு நம்பிக்கை தரும். கூடவே அணிக்கு சிறந்த முறையில் பங்களிப்பு தரவும் வாய்ப்பு தரும். நான் சிறப்பாக பந்து வீசினால் அது எனது பேட்டிங்கிலும் எதிரொலிக்கும்

ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எனது பேட்டிங் செயல்பாடும் இருக்கும். ஆப்கானிஸ்தான் உடன் பேட் செய்தது நம்பிக்கை தந்தது. வங்காளதேச போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியும் என அறிந்திருந்தேன். நான் ஸ்மார்ட்டாக விளையாட முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்