< Back
கிரிக்கெட்
பார்டர் -கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறாது - இந்திய வீரர்...!
கிரிக்கெட்

பார்டர் -கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறாது - இந்திய வீரர்...!

தினத்தந்தி
|
8 Feb 2023 12:46 PM IST

பார்டர் -கவாஸ்கர் தொடரில் அஷ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது, இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரை கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி இதை கைப்பற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரை எந்த அணி கைப்பற்றும், யார் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுப்பார் என ஒரு நிகழ்ச்சியில் பதில் அளித்த இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான அபினவ் முகுந்த கூறும் போது,

இந்த தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என நினைக்கிறேன். இந்த கணிப்பை சந்தேகத்தின் அடிப்படையிலேயே தருகிறேன். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அண்னி ஒரு போட்டியை கூட வெல்லாது என நான் நினைக்கிறேன். அவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அவர்கள் ஒரு போட்டியில் வேண்டுமானால் வெற்றி பெறலாம் ஆனால் என்னைப் பொறுத்தவரை இது 3-0 என்ற கணக்கில் தான் முடியும்.

ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான சாதனைகளை வைத்துள்ளார். இந்த தொடரில் அவர் தான் அதிக ரன்கள் எடுப்பார் என நினைக்கிறேன். அவர் அதிக ரன்கள் எடுப்பார் என கணிக்கிறேன், அவ்வாறு இல்லையெனில் ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடரில் எதுவும் சரியாக அமையாது என நினைக்கிறேன்.

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றுவார். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்த தொடருக்காக அஷ்வின் மிகச்சிறபாக தயாராகி வருகிறார். ஜடேஜாவும் விக்கெட்டுகளை வீழ்த்துவார் ஆனால் அஷ்வினே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்