< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன் - ரோகித் சர்மா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன் - ரோகித் சர்மா

தினத்தந்தி
|
16 July 2024 6:49 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

டல்லாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன் என்ற இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு கட்டத்தில் கடைசில் 5 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆனால் அப்போது 16 மற்றும் 18-வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதிரடியாக ஆடிய கிளாசென் 17வது ஓவரின் முதல் பந்திலேயே பாண்ட்யா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து 19வது ஓவரை அர்ஷ்தீப் சிங் கச்சிதமாக வீசிய நிலையில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது பாண்ட்யாவின் முதல் பந்தில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை அபாரமாக பிடித்த சூர்யகுமார் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது என்ன செய்வதென்று தெரியாமல் தாம் காலியாக இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டல்லாஸில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ரோகித் கூறியதாவது,

ஆம் அந்த நேரத்தில் நான் காலியாக இருந்தேன். அதே சமயம் அதிகமாக சிந்திக்கவில்லை. அப்போது நிகழ்காலத்தில் இருந்து கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்துவது முக்கியமாக இருந்தது. நாங்கள் அனைவருமே பதறாமல் எங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது முக்கியமாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம்.

அந்த சமயத்தில் வீசிய 5 ஓவர்களும் எந்தளவுக்கு நாங்கள் அழுத்தத்திலும் அமைதியாக இருந்தோம் என்பதை காட்டுகிறது. நாங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் வேலையில் கவனம் செலுத்தினோம். அந்த சமயங்களில் நாங்கள் பதறவில்லை. அது தான் வெற்றிக்கு நல்ல விஷயமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்