< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததை கண்டு இரவு முழுவதும் அழுதேன் - கவுதம் கம்பீர்

image courtesy: AFP 

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததை கண்டு இரவு முழுவதும் அழுதேன் - கவுதம் கம்பீர்

தினத்தந்தி
|
2 July 2024 6:52 PM IST

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவு பெற்றது.

இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் 1992ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை பார்த்து அன்று இரவு முழுவதும் அழுததாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, அந்த ஒரு போட்டியை பார்த்து நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உண்மையில் நான் அன்று இரவு முழுவதும் அழுதேன். அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நான் அப்படி எதற்குமே அழுதது கிடையாது.

அப்போது எனக்கு 11 வயது நான் இரவு முழுவதும் அழுதேன் என்று சொன்னேன். நான் அப்பொழுதுதான் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992ல் முடிவு செய்து 2011ஆம் ஆண்டு நிறைவேற்றினேன். அந்த போட்டிக்கு முன்னும் பின்னும் நான் மகிழ்ச்சியற்றவனாக உணர்ந்திருப்பேன். ஆனால் அப்படி அழுததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்