< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐதராபாத் - குஜராத் ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
|16 May 2024 7:07 PM IST
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ஐதராபாத் - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.
ஐதராபாத்,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் அங்கு தற்சமயம் மழை பெய்து வருவதன் காரணாமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.