< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
தாயகம் திரும்பிய மிட்செல் மார்ஷ்; டெல்லி அணியில் குல்படின் நைப் சேர்ப்பு
|26 April 2024 4:50 AM IST
ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் குல்படின் நைப்பை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல்- ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தசைபிடிப்பால் அவதிப்படுகிறார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் தாயகம் திரும்பி விட்டார்.
அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் குல்படின் நைப்பை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் 65 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ள குல்படின் நைப் 3 அரைசதம் உள்பட 807 ரன்களும், 26 விக்கெட்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.