< Back
கிரிக்கெட்
ரகசிய கேமிரா முன் உளறி கொட்டிய சேத்தன் சர்மா அம்பலமான கிரிக்கெட் வீரர்கள் ரகசியம் முழுவிவரம்
கிரிக்கெட்

ரகசிய கேமிரா முன் உளறி கொட்டிய சேத்தன் சர்மா அம்பலமான கிரிக்கெட் வீரர்கள் ரகசியம் முழுவிவரம்

தினத்தந்தி
|
15 Feb 2023 12:49 PM IST

இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தலைவர்களாக உள்ளன

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியை தீர்மானிக்கும் இடத்தில் 5 நபர்கள் உள்ளனர். அவர்கள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, உறுப்பினர்கள் ஷிவ் சுந்தர் தாஸ், சுரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் ஆவார்கள். 20 ஓவர் உலக கோப்பை தோல்விக்கு பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான குழு கலைக்கபட்டு மீண்டும் அவர் தலைமையிலேயே புதிய குழு ஒன்றை பிசிசிஐ கடந்த ஜனவரியில் அமைத்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மாவை செவ்வாயன்று ஜீ மீடியா உளவு கேமராவால் ரகசியமாக சேத்தன் சர்மா கூறியவற்றை படம் பிடித்தது

அதில் இந்திய அணியில் போலி பிட்னஸ் ஊசி பயன்படுத்தப்பட்டது, சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் மற்றும் அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட முன்னர் மறைக்கப்பட்ட உண்மைகளை சர்மா வெளிப்படுத்தினார்.

ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற இந்திய வீரர்கள் அவர் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர், மேலும் அவரது வீட்டிற்கும் சென்றுள்ளனர். மற்றவர்களை விட பாண்ட்யா அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது.

சர்மாவின் கூற்றுப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தலைவர்களாக உள்ளனர் என கூறி உள்ளார்.

ஸ்டிங் வீடியோவில் தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளதாவது:-

இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ரோகித் அவரிடம் பேசும் போது எல்லாம் அவர்களின் உரையாடல் குறைந்தது 30 நிமிடங்கள் நீடிக்கும் என கூறினார்

மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தை மறைத்ததாக வீடியோவில் கூறியுள்ளார். தொடரின் 2 வது போட்டிக்கு முன்பு, பும்ராவின் வலி அதிகரித்தது, ஆனால் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை 2022 அணியில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள அதை மறைத்தார். பின்னர் 3வது போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர் அப்போதும் குணமடையவில்லை.

வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்ததும், சுப்மான் கில்,சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னை 'விளையாட்டை விட பெரியவர்' என்று கருதத் தொடங்கினார்.

"20 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வலுவான தொடக்க வீரர்களுக்கு "ஓய்வு" கொடுக்கப்பட்டுள்ளது. ஷுப்மான் கில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட காலத்திற்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் ரோகித் சர்மா இனி ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்

விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை, ஆனால் ஈகோ உள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா போன்று இருவரும் பெரிய திரைப்பட நட்சத்திரங்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

கங்குலி ரோகித்துக்கு சாதகமாக இல்லை ஆனால் அவர் விராட்டை விரும்பவே இல்லை.

பிசிசிஐ தலைவரால் கேப்டன் பதவியை இழந்ததாக விராட் கோலி கருதினார். தேர்வு கமிட்டி வீடியோ கான்பரன்ஸ்ல 9 பேர் இருந்தாங்க நான் மற்றும் மற்ற அனைத்து தேர்வாளர்கள், பிசிசிஐ அதிகாரிகள் உட்பட 9 பேர் அங்கு இருந்தோம் 'ஒருமுறை யோசிச்சுப் பாருங்க'னு கங்குலி சொல்லியிருக்கலாம். கோலி அதைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.

அவர்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது ஊக்கமருந்துகளில் வரும். ஊக்கமருந்து எதிர்ப்பு ஊசியில் எந்த ஊசி வரும் என்று இந்திய அணி வீரர்கள் அறிந்திருக்கிறார்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்