டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி
|இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதே போல் நாளை மறுதினம் நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செய்லபடவுள்ளனர். நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக (ரெப்ரீ) இருப்பார்.
அதேபோல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராகவும், ரிச்சர்ட் கெட்டில்பரோ மூன்றாவது நடுவராகவும் செயல்படவுள்ளனர். மைக்கேல் கோக் நான்காவது நடுவராகவும் மற்றும் கிறிஸ் பிராட் போட்டி நடுவராகவும் (ரெப்ரீ) நியமிக்கப்பட்டுள்ளனர்.