< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பந்து தாக்கியதில் தலையில் காயம் - வங்காளதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி
|18 Feb 2024 5:45 PM IST
காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்கா,
மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானின் தலையில், சக வீரரான லிட்டன் தாஸ் அடித்த பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட சக வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஸ்கேன் மேற்கொண்டதில் வெளிப்புற காயம் மட்டுமே உள்ளதாகவும், பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.