< Back
கிரிக்கெட்
நான் அதிகம் தவறவிடும் நபராக அவர் இருப்பார் - டிராவிட் உருக்கம்
கிரிக்கெட்

நான் அதிகம் தவறவிடும் நபராக அவர் இருப்பார் - டிராவிட் உருக்கம்

தினத்தந்தி
|
1 July 2024 1:17 AM GMT

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில்,' வீரராக நான் செய்ய முடியாததை பயிற்சியாளராக பரிகாரம் தேடிக் கொண்டதாக நினைக்கவில்லை. ஏனெனில் உலகக்கோப்பையை வெல்லாத வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி. உலகக்கோப்பையை வெல்வதை சாத்தியமாக்கிய இந்த வீரர்களை பெற்றதிலும் எனக்கு அதிர்ஷ்டம் தான். இது ஒரு அற்புதமான உணர்வு.

பயிற்சியாளர் பணியை மிகவும் விரும்பி செய்தேன். ரோகித் சர்மா சிறந்த வீரர் மட்டுமல்ல, அருமையான கேப்டனும் ஆவார். என்னிடம் மிகுந்த மரியாதை காட்டிய அவர் அணி மீது காட்டிய அக்கறையும், அர்ப்பணிப்பும், எதிலும் பின்வாங்காத குணமும் என்னை கவர்ந்தது. இந்திய அணியை விட்டு விலகிய பிறகு நான் அதிகம் தவற விடும் ஒரு நபராக ரோகித் சர்மா இருப்பார். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்