இந்திய அணிக்கு அவர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார் - சவுரவ் கங்குலி
|டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கங்குலி கூறினார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது, நான் இந்திய பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்கிறேன். கம்பீர் விண்ணப்பித்து இருந்தால், இந்திய அணிக்கு அவர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. அபாரமான திறமை கொண்ட வீரர்கள் நம்மிடம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். கொல்கத்தா அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.