< Back
கிரிக்கெட்
அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா பேட்டி
கிரிக்கெட்

'அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்' - ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா பேட்டி

தினத்தந்தி
|
7 Feb 2023 2:54 AM IST

அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா கூறியுள்ளார்.

பெங்களூரு,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா நேற்று அளித்த பேட்டியில், 'அஸ்வின் ஒரு துப்பாக்கி போன்றவர். மிகவும் திறமைசாலி. பந்து வீச்சில் அதிகமாக சிறிய, சிறிய வேறுபாடு காட்டக்கூடியவர். கிரீசை நன்றாக பயன்படுத்தும் பந்து வீச்சாளர்.

அஸ்வின் போன்ற ஒரு ஆப்-ஸ்பின்னரை எப்படி விளையாட வேண்டும் என்று முன்னர் கேட்டு இருந்தால் எனக்கு பதில் அளிக்க தெரிந்து இருக்காது. ஆனால் இப்போது போதுமான அளவு கற்று இருக்கிறேன். ஆடுகளத்தில் பந்து ஒரு கட்டத்தில் சுழலுக்கு உகந்ததாக மாறும். அதாவது முதல் நாளிலோ அல்லது 3-வது நாளிலோ அல்லது 4-வது நாளிலோ பந்து சுழலக்கூடும். அஸ்வின் நிறைய ஓவர்கள் வீசுவார். இது நிச்சயம் கடும் சவாலாக இருக்கும்.

அவர் எப்படி பந்து வீசினாலும், நான் அவரது பந்து வீச்சை எப்படி விளையாடப்போகிறேன். எவ்வளவு ரன் எடுக்கிறேன் என்பது முக்கியமானதாகும். அவருக்கு எதிராக நீங்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால் அவர் தனது ஆட்ட திட்டத்தை மாற்றுவார். இந்திய துணைகண்டத்தில் தொடக்க வீரராக ஆடுவது எளிது என்று மக்கள் நினைக்கிறார்கள். களத்தில் புதிய பந்து வெவ்வேறு விதமாக திரும்பும் போது கடினமாக இருக்கும்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்