< Back
கிரிக்கெட்
இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை - பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்
கிரிக்கெட்

இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை - பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்

தினத்தந்தி
|
27 Aug 2023 1:35 AM IST

இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு தேர்வாளர்கள் இடம் அளிக்காதது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'தற்போதைய இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை. அவரது பந்து வீச்சு நிலையற்றதாக இருக்கிறது. ஆனால் குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். மிடில் ஓவர்களில் அவர் நன்றாக பந்து வீசுகிறார். சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வாளர்கள் அணியில் சேர்த்தது சரியான முடிவாகும்' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்