ஐதராபாத் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் சேர்ப்பு
|அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் ரூ.1½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடையாததால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகி உள்ளார் .. இந்த சீசனில் அவர் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சேர்க்கப்பட்டு இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இலங்கை தமிழரான 22 வயதான விஜயகாந்த் அந்த நாட்டு அணிக்காக ஒரே ஒரு சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் எடுத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் உள்பட ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 33 ஆட்டங்களில் ஆடி 42 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்