< Back
கிரிக்கெட்
கிரிப்டோ கரன்சி போல் சரிந்துவிட்டீர்களா?... இந்திய அணியின் பார்ம் குறித்து சேவாக் டுவீட்

Image Courtesy : PTI 

கிரிக்கெட்

கிரிப்டோ கரன்சி போல் சரிந்துவிட்டீர்களா?... இந்திய அணியின் பார்ம் குறித்து சேவாக் டுவீட்

தினத்தந்தி
|
8 Dec 2022 1:33 PM IST

இந்திய வீரர்களின் பார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி,

இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 38 ரன்கள் சேர்க்க, வங்காள தேசம் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்தது. நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 69 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்திருந்தது. அதன்பின் மெஹிது மெஹ்முதுல்லா ஜோடி அபாரமாக விளையாடியது, மெஹிதி சதம் அடிக்க வங்காளதேசம் 271 ரன்கள் குவித்துவிட்டது.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.

இந்த நிலையில் இந்திய வீரர்களின் பார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ''நம்முடைய பெர்பார்மன்ஸ் கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். எழுந்திருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மேலும் செய்திகள்