< Back
கிரிக்கெட்
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தன் காதலி முன் சதம் விளாசிய ஹாரி ப்ரூக்.! - நெகிழ்ச்சி பேட்டி
கிரிக்கெட்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தன் காதலி முன் சதம் விளாசிய ஹாரி ப்ரூக்.! - நெகிழ்ச்சி பேட்டி

தினத்தந்தி
|
14 April 2023 10:58 PM IST

ஐபிஎல்-லில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹாரி புரூக் சதமடித்து அசத்தினார்.

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்ததாக பேட்டியில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர்.

அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் செய்திகள்