பரபரப்பான கடைசி ஓவர்... ஹர்திக் பாண்டியாவின் கூலான முக பாவனை.. அடுத்த பந்தில் சிக்சர்- வைரல் வீடியோ
|பாண்டியா எதிரே இருந்த கார்த்திகை பார்த்து நிதானமாக "நான் பார்த்து கொள்கிறேன்" என்பது போல் முக பாவனை செய்தார்.
துபாய்,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
குறிப்பாக சேசிங்யின் போது கடைசி ஓவரில், நான்காவது பந்தில், பாண்டியா சிக்சர் அடித்து "கூலாக" போட்டியை முடித்து வைத்தார். குறிப்பாக இந்திய அணி வெற்றி பெற கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சிக்சர் அடிப்பதற்கு முந்தய பந்தில் பாண்டியா ரன் எதுவும் எடுக்கவில்லை.
இதனால் 3 பந்துக்கு 6 ரன்கள் என்று போட்டியில் பரபரப்பு காணப்பட்டது. அப்போது பாண்டியா எதிரே இருந்த கார்த்திகை பார்த்து நிதானமாக "நான் பார்த்து கொள்கிறேன்" என்பது போல் முக பாவனை செய்தார். பின்னர் அடுத்த பந்தில் போட்டியை சிக்சருடன் முடித்து வைத்தார். அவரின் இந்த "ரியாக்சன்" தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியாவின் நம்பிக்கையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.