< Back
கிரிக்கெட்
ஹர்திக் பாண்டியா அரைசதம்..! 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்
கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா அரைசதம்..! 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

தினத்தந்தி
|
22 April 2023 5:18 PM IST

தொடர்ந்து 136 ரன்களுடன் லக்னோ விளையாடுகிறது

லக்னோ,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக கில் , விருத்திமான் சஹா களமிறங்கினர் . தொடக்கத்தில் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா நிலைத்து ஆடினார். சஹா , பாண்டியா இணைந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.

அணியின் ஸ்கோர் 72ரன்னாக இருந்தபோது சஹா47 ரன்களில் வெளியேறினார், அடுத்து வந்த அபினவ் மனோகர் 3 ரன்களில் , விஜய் சங்கர்10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.மறுபுறம் பொறுப்புடன் ஆடிய பாண்டியா அரைசதம் அடித்தார், பின்னர் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட பாண்டியா 66 ரன்களில் ஆட்டமிழந்தார்,,.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 135ரன்கள் எடுத்தது . லக்னோ சார்பில் குருனால் பாண்டியா , ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



தொடர்ந்து 136 ரன்களுடன் லக்னோ விளையாடுகிறது

மேலும் செய்திகள்