ஹர்திக் பாண்டியாவை கட்டிப் பிடித்து மனைவி நடாஷா ஆனந்தக்கண்ணீர்- வைரல் வீடியோ
|இறுதி போட்டியை காண ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா வந்து இருந்தார்.
அகமதாபாத்,
மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். முதல் அணியாக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டி சென்றுள்ளது.
இந்த நிலையில் குஜராத் அணியின் இறுதி போட்டியை காண ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா வந்து இருந்தார். குஜராத் அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் நின்று இருந்த ஹர்திக் பாண்டியாவை அவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.
இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.