< Back
கிரிக்கெட்
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்.!
கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்.!

தினத்தந்தி
|
19 Oct 2023 3:28 PM IST

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

புனே,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

இந்த ஆட்டத்தின் 9-வது ஓவரை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீச வந்தார். அந்த ஓவரில் தனக்கு நேராக வந்த பந்தை காலால் தடுக்க ஹர்திக் முற்பட்டார். அப்போது தவறி கீழே விழுந்த அவருக்கு காலில் பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திலேயே சிறிது சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், தொடர்ந்து அந்த ஓவரில் எஞ்சிய மூன்று பந்துகளை வீச முயன்றார்.

ஆனால், பந்துவீச அவரது கால் ஒத்துழைக்காததால், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து விராட் கோலி, அந்த ஓவரின் எஞ்சிய 3 பந்துகளை வீசி முடித்தார்.

மேலும் செய்திகள்