இதுவரை எந்த இந்திய வீரரும் படைத்திராத சாதனையை படைத்த ஹர்திக் பாண்ட்யா
|ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.
புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் டி20 போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 2 இடங்கள் முன்னேறி, முதல்முறையாக 'நம்பர் 1' அரியணையில் ஏறியுள்ளார்.
முதலிடத்தை இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்காவுடன் இணைந்து பகிர்ந்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீரர்களில் அவரும் ஒருவர். இதனால் இத்தகைய ஏற்றம் கண்டுள்ளார்
மேலும் இதன் மூலம் எந்த இந்திய வீரரும் படைத்திராத சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார். டி20 வரலாற்றில் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்