< Back
கிரிக்கெட்
காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சி செய்யும்  ஹர்திக் பாண்ட்யா -  வீடியோ..!
கிரிக்கெட்

காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சி செய்யும் ஹர்திக் பாண்ட்யா - வீடியோ..!

தினத்தந்தி
|
3 Jan 2024 4:47 AM IST

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது பாண்ட்யா கணுக்காலில் காயம் அடைந்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது பாண்ட்யா கணுக்காலில் காயம் அடைந்தார்.

அதன் பின்னர் எந்த வித கிரிக்கெட்டிலும் ஆடாமல் ஓய்வில் இருந்து வரும் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஹர்திக் தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறார். காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக், உடற்தகுதி பெரும்வகையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, கேப்ஷனாக, "முன்னேற்றம், தினமும்" என்றும் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. வரும் ஐபிஎல் தொடரில் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்