< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
|10 Nov 2022 3:18 PM IST
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 169- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.