குர்பாஸ், இக்ராம் அரைசதம்...இங்கிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்...!
|ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ், இக்ராம் அலிகில் அரைசதம் அடித்தனர்.
டெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு அபாரமான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 114 ஆக உயர்ந்த போது இப்ராகிம் ஜட்ரான் 28 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 3 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 57 பந்தில் 80 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிடி 14 ரன், அடுத்து களம் இறங்கிய ஓமர்சாய் 19 ரன், நபி 9 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ரஷீத் கான் மற்றும் இக்ராம் அலிகில் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீத் கான் 23 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து முஜீப் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய இக்ராம் 58 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட உள்ளது.