< Back
கிரிக்கெட்
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் வீரர் கேன் வில்லியம்சன் விலகல்..!
கிரிக்கெட்

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் வீரர் கேன் வில்லியம்சன் விலகல்..!

தினத்தந்தி
|
1 April 2023 1:24 PM IST

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது.

அகமதாபாத்,

நடப்பு ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அப்போது சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பந்தை சிக்சருக்கு அடிதபோது, அதனை எல்லைக்கோட்டிற்கு அருகே நின்றுகொண்டிருந்த வில்லியம்சன் கேட்ச் பிடிக்க முயன்றார்.

பந்து பவுண்டரி லைனை தாண்டி சென்றதால், லாவகமாக பிடித்து அதனை எல்லைக்கோட்டிற்கு உள்ளே போட்டார். அப்போது நிலை தடுமாடி கீழே விழுந்த அவர் எல்லைக்கோட்டிற்கு அருகே சுருண்டு விழுந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் இரண்டாம் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. அவரது காயம் அதிகமானதை தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்