< Back
கிரிக்கெட்
சிறந்த வீரர்கள் எப்போதும் சிறந்த தொடரை தேர்வு செய்கிறார்கள்...விராட் கோலியை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..!

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

சிறந்த வீரர்கள் எப்போதும் சிறந்த தொடரை தேர்வு செய்கிறார்கள்...விராட் கோலியை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..!

தினத்தந்தி
|
8 Feb 2023 12:07 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது.

மெல்போர்ன்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரரகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் மிக கடினமான விஷயம் என்னவென்றால் அது சுழற்பந்து வீச்சு தான். ஏனெனில் இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகாமனா பிட்சுகள் தான் அதிகளவில் இருக்கும். இதை எந்த அணி திறம்பட சாமாளிக்கிறதோ அந்த அணியே தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரை யார் கைப்பற்றுவார், யார் தொடர் நாயகன் விருது பெறுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்போதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி இந்த தொடரிலும் ரன்களை குவிப்பார் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கோலி குறித்து நிகழ்ச்சிய ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறும் போது,

கிரிக்கெட் உலகில் கோலி ஒரு மிகப்பெரிய வீரர். அவரின் தற்போதையை வயதிற்கும், அவர் கிரிக்கெட்டில் தற்போது இருக்கும் நிலைக்கும் அவர் இந்த தொடரை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என நினைப்பார். கோலி போன்ற சிறந்த வீரர்கள் எப்போதும் சிறந்த தொடரையே தேர்வு செய்வார்கள்.

டி20 உலகக்கோப்பையில் அவர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்பதை பார்த்தோம். அவர் ரன் குவிக்க எவ்வளவு பசியுடன் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு அறிகுறி. அவர் நிச்சயமாக எங்களை பின்னுக்கு தள்ளக்கூடியவர், தொடரை வெல்ல நாங்கள் அவரை சிறப்பாக கையாள வேண்டும். அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்