இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் உலகக் கோப்பை; பாகிஸ்தான் ரசிகரிடம் மாஸ் காட்டிய சுந்தர் பிச்சை
|பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
சென்னை
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆடிய ஆட்டத்தில் கோலி தன்னுடைய திறமையான ஆட்டத்தை பதிவு செய்தார்.
நேற்று பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இதுகுறித்து டுவீட் செய்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, "தீபாவளி வாழ்த்துகள்! தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனைவரும் சிறப்பாக பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் நேற்றைய ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்களை இன்று மீண்டும் பார்த்து பண்டிகையைக் கொண்டாடினேன். என்னவொரு போட்டி, என்னவொரு ஆட்டம்," என்று டீம் இந்தியா, டி20 உலகக் கோப்பை 2022 ஆகிய ஹேஷ்டேக்குகளோடு டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 'நீங்கள் முதல் 3 ஓவர்களையும் கட்டாயம் பார்க்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்து இருந்தார். ''அதையும் பார்த்தேன்''புவனேஷ்வர் குமாரும், அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்று அவர் பதிலளித்துள்ளார்.