< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண  சச்சினுக்கு கோல்டன் டிக்கெட்

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண சச்சினுக்கு கோல்டன் டிக்கெட்

தினத்தந்தி
|
8 Sept 2023 6:01 PM IST

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா 'கோல்டன் டிக்கெட்'-ஐ சச்சினுக்கு வழங்கியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இதன் ஒரு நிகழ்வாக பிசிசிஐ இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது.

அதன்படி பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார் . இதனை பிசிசிஐ தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது. ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை சச்சினுக்கு வழங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

முன்னதாக செவ்வாய் கிழமை அன்று ஜெய் ஷா பாலிவுட் மெகா நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார்.

மேலும் செய்திகள்