< Back
கிரிக்கெட்
ஷர்துல் தாக்கூருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்..!!

image courtesy; twitter/ @BCCI

கிரிக்கெட்

ஷர்துல் தாக்கூருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்..!!

தினத்தந்தி
|
13 Oct 2023 12:40 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் சிறந்த பீல்டராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சிறந்த பீல்டராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அடித்த பந்தை ஷர்துல் தாக்கூர் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் சிறந்த பீல்டர் விருது பெற்ற விராட் கோலியிடம் இருந்து பதக்கம் ஷர்துல் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை விராட் கோலியே தாக்கூருக்கு வழங்கி சிறப்பித்தார்.


மேலும் செய்திகள்