பிளே ஆப் சுற்றில் சிக்சர் மழை பொழிந்த குஜராத் வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்...!
|ஐபிஎல் பிளே ஆப் 2 - நடப்பு சீசனில் 3வது சதத்தை பதிவு செய்தார் குஜராத் வீரர் சுப்மன் கில். 7 போர்கள், 10 சிக்சர்கள் என 60 பந்துகளில் சதம் விளாசினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மழை நின்ற பிறகு ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 60 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
7 போர்கள், 10 சிக்சர்கள் என 60 பந்துகளில் சதம் விளாசினார்.