< Back
கிரிக்கெட்
கில் உங்களை சதமடிக்க விடவில்லையா..? ரசிகரின் கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதில்
கிரிக்கெட்

கில் உங்களை சதமடிக்க விடவில்லையா..? ரசிகரின் கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதில்

தினத்தந்தி
|
16 July 2024 7:08 AM IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் கில் உங்களை சதமடிக்க விடவில்லையா? என்று ஒரு ரசிகர் நேரடியாகவே ஜெய்ஸ்வாலிடம் கேட்டார்.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக இந்த தொடரின் 4-வது போட்டியில் கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடு ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 83 ரன்களில் இருந்தபோது இந்தியா வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அவரை சதமடிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் அதை செய்யாமல் ஸ்ட்ரைக்கை தன் பக்கமே வைத்து தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். அதனால் கில் மிகவும் சுயநலமாக செயல்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இந்நிலையில் 4வது போட்டியில் கில் உங்களை சதமடிக்க விடவில்லையா? என்று ஒரு ரசிகர் நேரடியாகவே ஜெய்ஸ்வாலிடம் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு:- "சுப்மன் கில்லுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் விளையாடிய அனுபவம் நன்றாக இருந்தது. இந்தியாவுக்காக நான் விளையாடும் போதெல்லாம் அதை பெருமையாக உணர்வேன். அந்தப் போட்டியில் நாங்கள் பினிஷிங் செய்து அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுப்பதை பற்றி சிந்தித்தோம். அதனால் விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே எங்களுடைய மனதில் இருந்தது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்