கவாஸ்கர், சச்சினுக்கு பிறகு....மாபெரும் சாதனை படைத்த புஜாரா
|புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் அடித்துள்ளார்.
நாக்பூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா, விதர்பா அணியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 43 ரன்கள் அடித்த புஜாரா, இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.
புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் அடித்துள்ளார். இதேபோன்று உள்ளூர் கிரிக்கெட்டிலும் புஜாரா பட்டையை கிளப்பி இருக்கிறார். 61 சதம், 77 அரை சதம் என முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அசத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் புஜாரா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.
அந்த பட்டியல்
1 கவாஸ்கர் - 25, 834 ரன்கள்
1. சச்சின் டெண்டுல்கர் - 25,396 ரன்கள்
3. ராகுல் டிராவிட் - 23, 794 ரன்கள்
4. புஜாரா - 20, 013 ரன்கள்