< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்
கிரிக்கெட்

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்

தினத்தந்தி
|
20 April 2024 2:00 AM IST

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

லாகூர்,

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதன் எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் கிரான்ட் பிராட்பர்ன் பொறுப்பை விட்டு விலகினார். இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் அசார் மக்மூத் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் கிர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். அவருக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. நேர்காணல் நடத்தி நீண்ட கால ஒப்பந்தம் அடிப்படையில் பயிற்சியாளரை நியமிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்