ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கங்குலி ?... பிசிசிஐ தலைவராகும் ஜெய் ஷா...!
|தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக தற்பொழுது கிரெக் பார்க்லே இருந்து வருகிறார், அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது.இந்த நிலையில் ஐசிசி-யின் தலைவர் பதவிக்கு தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி தலைவராக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை இல்லை என்றும் 51 சதவீத வாக்குகள் பெற்றாலே போதும் என்றும் புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என பல உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது
இதனால் தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. குறிப்பிடத்தக்கது.