கம்பீர் தேர்வு செய்த உலகக்கோப்பை அணி...தமிழக வீரருக்கு இடம் - ஸ்ரேயாஸ், சாம்சனுக்கு இடம் இல்லை...!
|உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று மதியம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்காக தான் தேர்வு செய்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார். இதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஸ்ரேயாஸ் மற்றும் சாம்சன் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவர் தேர்வு செய்த அணியில் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் அளித்துள்ளார்.
கவுதம் கம்பீர் தேர்வு செய்த உலகக்கோப்பை இந்திய அணி விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், அக்சர் படேல், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி.